சனி, 14 மார்ச், 2009

யாருக்கும் கிடைக்காத அண்ணன்கள் ....

எனக்கு கிடைத்த அண்ணன்கள் .......

அன்பு பதிவு நண்பர்களே...உங்களுக்கு நான் சொல்லபோவது வேண்டுமென்றல் சின்ன விழயமா இருக்கலாம்..ஆனா எனக்கு இது ரொம்ப பெரியது ...

எங்க வீட்டுல நான் தான் கடைக்குட்டி .. அதாவது கடைசி பையன் ... எனக்கு இரண்டு அண்ணன்கள் ... அதான் அவங்கள பத்தி தான் நான் சொல்லப்போறேன் .... என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர் ..... நான் பெருமைக்காக சொல்லவரல என் அப்பா ரொம்ப சிக்கனமானவர் ... எந்த பிரச்சனைக்கும் போகமாட்டாங்க ... தான் உண்டு தன் வேலை உண்டு ,என்று இருப்பாங்க .அம்மா எப்பவும் எனக்கு ஆதரவா பேசுவாங்க .எங்க மூணு பேருல நான் மட்டும்தான் உருப்பிடாத ஆளு என்று என் அப்பா அடிக்கடி திட்டுவாங்க ...

நான் பத்தாவது படிக்கும் போதே என் சின்ன அண்ணன் சிங்கப்பூர் போயி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டார் ....அடுத்த ஒரு வருடத்தில பெரிய அண்ணனும் சிங்கப்பூர் போயிட்டார் ....இரண்டு பேரும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க ... ஆனா நான் மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேற்ப் படிப்பிற்காக என் அப்பா பல வகைகளில் பல லட்சங்கள் செலவு செஞ்சாங்க ... ஆனா எனக்கு எதவுமே சரியில்லை ..

ஆனா நான் வீனா செலவு நெறைய செய்வேன் .. அது என் அப்பாவிற்கு பிடிக்காது .. என் அப்பா என்னை எப்ப திட்டினாலும் என் அண்ணன்களை உதாரணம் காட்டி திட்டுவாங்க.நான் +2 முடித்து நான்கு வருடங்கள் ஆகியும் எனக்கு ஒரு தெளிவான முடிவு எடுக்கமுடியல .ஆனா என் அப்பா 2001 இல் பல முயற்சிகளுக்கு பிறகு என்னை ஹோட்டல் நிர்வாக (அதாவது சமையல் கலை )படிப்பில் சேர்த்து விட்டார்கள் ...

ஏதோ வேறு வழி இன்றி அதை படித்து முடித்தேன் ....

ஆனா படித்து விட்டேன் . ஆனா அதற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை .ஏதோ சென்னைக்கு போயி ஒரு வழியா வேலைக்கு சேர்ந்தேன் .. ஆனா எனக்கு சம்பளம் மாதம் ரூபாய் 250/= மட்டுமே .. இருந்தும் என்னுடைய செலவுக்கு போதாது ..!!! எனவே மற்ற செலவுகளுக்கு என் அப்பாவை தான் எதிர்பார்த்தேன் ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே பணம் கிடைத்தது ..ஒரு நாள் என் அப்பா என்னிடம் இனிமேல் நீ என்னிடம் பணம் கேட்கக்கூடாது .நீ சம்பாதித்து உன் செலவுகளை பார்த்துக் கொள் என்றார் ..

எனக்கு வேறு வழி தோன்றவில்லை .. என் சின்ன அண்ணனிடம் பணம் கேட்டேன் .. என் அண்ணனும் சரி என்று பணத்தை சிங்கபூரிலிருந்து அனுப்பி வைத்தார் ...அந்த பணம் முடிந்தவுடன் அடுத்து என்னசெய்வது.. உடனே என் பெரிய அண்ணனிடம் பணம் கேட்டேன் ...எது சின்ன அண்ணனுக்கு தெரியாது .. இது போன்று பல தடவை இருவருக்கும் தெரியாமல் நிறைய பணம் வங்கி செலவு செய்து விட்டேன் ... பல தடவை பல பொய்களை சொல்லி பணம் வாங்கி இருக்கிறேன் .அவர்களும் தம்பி தானே என்று பணம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் ..நான் வீண் செலவு செய்கிறேன் என்று

என் நண்பர்கள் மூலம் என் அண்ணன்களுக்கு தெரிந்துவிட்டது . இருந்தும் நான் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கும்பொழுது என் அண்ணன்கள் இருவரும் உனக்கென்று ஒரு வழியை தேடிக்கொள் நாங்கள் முடித்தவரை உதவி செய்கிறோம் .ஆனால் உன் வாழ்க்கையை வீனடித்துவிடதே ...என்று அறிவுரை கூறுவார்கள் ... என்னால் மாதம் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடிய வில்லை ,ஏனெனில் ஹோட்டல் தொழில் அந்த மாதிரி .பலருக்கு படிக்க வழி இல்லை அப்படி படித்தாலும் பணம் கொடுக்க யாரும் முன் வருவதில்லை . ஆனால் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்தது பெங்களூரில் படித்தால் அமெரிக்கா செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறதென்று என் நண்பன் மூலம் அறிந்தேன் .. ஆனால் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆகும் .. ஆனால் என் அப்பா என்னை நம்பி பணம் கொடுக்க தயாரக இல்லை .ஏனென்றால் என்னைப் பற்றி நன்கு தெரியும் .

ஆனால் இதை என் அண்ணன்கள் இருவருக்கும் தெரிய வந்து இருவரும் கலந்து ஆலோசித்து ..எனக்கு பணம் தருவதாக முடிவு செய்தனர் .ஆனால் இருவருக்கும் என் மேல் நம்பிக்கை இல்லை .ஏதோ தம்பி என்ற ஒரு காரணத்திற்க்காக பணம் கொடுக்க முடிவு செய்தார்கள் .. பலபேரின் சொற்களை கேட்டு கொஞ்சம் தாமதமாகத்தான் பணம் கொடுத்தார்கள் ..

நானே என்னை புரிந்து கொண்டு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி என் அண்ணன்களின் கனவை நனவாக்கி என் அப்பாவிடமும் நல்ல மகனென்று நிருபித்து விட்டேன் .. இன்று நான் அமெரிக்காவில் வேலை பர்த்துக்க் கொண்டிருக்கிறேன் .இன்றைய காலகட்டத்தில் இது போன்ற அண்ணன்கள் எனக்கு கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன் ...என் பாசமிகு அண்ணன்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாமல் இதோ ஒரு கவிதையை சமர்பிக்கிறேன் ...

என் அண்ணன்களுக்காக ஒரு கவிதை

எனக்கோ இரண்டு அண்ணன்கள்

மூத்தவர் பாரதி

இளையவர் முரளி

ஆனால்

எனக்கோ இரண்டு தம்பிகள்

அடுத்த பிறவியில் ...

என் அண்ணன்களுக்கு

அண்ணனாக நான் பிறக்க ஆசை ...

(உங்களோட அண்ணன்கள் எப்படி நண்பர்களே .....!!!!)

அரட்டை அகிலன் ..........

3 கருத்துகள்:

  1. கவிதை நெகிழ்ச்சியா இருந்தது..:)

    பதிலளிநீக்கு
  2. நாலு அண்ணன், மூனு அக்கா இருக்காங்க. அன்பான அப்பா அம்மா (அப்பா போன வருடம் காலமானார்.). நான் கல்லூரி முடிக்கும்நன்றாக இருந்தது. நல்ல அண்ணன் + நண்பன் இரண்டும் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும். எனக்கு பாசமிகு வரை அவர்கள் எல்லாரும் என்னை படிக்க வைத்தார்கள் ஆனா பாருங்க நான் ரொம்ப சமர்த்து படிப்பு முடிச்சு இரண்டு மாசத்தில் வேலைக்கு வந்துட்டன்(சந்தை பிரதி நிதி). அதனால நான் அதுக்கு அப்புறம் இதுவரைக்கும் நான் பணம் கேக்கும் சமயம் வரலை. நான் சிங்கைக்கு வேலைக்கு வந்து என் அண்ணன் அனைவருக்கும் நேக்கியா 83 மாடல் பரிசளித்தேன். இப்ப அக்காமார்களுக்கு பரிசு கொடுக்கப்போறேன்.

    பதிலளிநீக்கு
  3. தாங்களின் சகோதர சகோதரிகளுடன் எப்போதும் ஒற்றுமைய இருக்கனுமுன்னு வாழ்த்துகிறேன் ....

    நண்பரே தாங்கள் கருத்துரைக்கு நன்றி .....

    அன்புடன் அகிலன்

    பதிலளிநீக்கு