ஞாயிறு, 8 மார்ச், 2009

கருவறையில் குழந்தை...!!!! கல்லறையில் அம்மா..!!!!!

கருவறை பூங்காவில்

கால் உதைத்த நேரமெல்லாம்

கண் இமைக்கும் நேரத்தில்

காணாமல் போய்விட்டன .....!

பத்து மாதம் பட்டதெல்லாம்

துன்பமென நினைத்ததை

பெற்றெடுத்த நிமிடமே

பெருமூச்சு விட்டாள்

சந்தோஷ களிப்பில் ....!!

வாரிசு ஒன்று வந்ததென்று

குடும்பமே குதுகலிக்க

வந்தோருக்கெல்லாம்

வாய் சுவைக்க வகை வகையான

மிட்டாய்கள் .........!!!

பெற்றெடுத்த மகன்

கண் விழித்து பார்க்க

நாட்கள் பல ஆகின ....!!!!

மருத்துவரின் கவனக்குறைவால்

மகனை ஈன்றுவிட்டு

மாண்டு விட்ட தாய்.....!!!!!

இன்று

வாய் பேச வரும்போது

ஆசையை அழைத்தான் அம்மா என்று ...!!!!

கூப்பிட்ட குரலுக்கு

பதிலேதும் வரவில்லை .....!!!!

அன்று

குழந்தைக்கு

அம்மா யாரென்று

தெரியாமல்

கருவறையில் .......!!!!!

இன்று

அம்மா யாரென்று

தெரிந்தும்

காண இயலாமல்

கண்ணீர் துளியோடு

கல்லறையில் .........!!!!!!!!!

நீர் வடியும் கண்களோடு ........

அரட்டை அகிலன் ....

பின் குறிப்பு : இன்றைய காலகட்டத்தில் பிரசவ அறையில் இறக்கும் தாயின் எண்ணிக்கை அதிகம் ....ஒருவன் பிறக்கும்போது அவனது தாய் மரணமடைந்து விட்டால் இதை விட கொடுமை வேறு இல்லை ......!!!!மருத்துவர்களே கொஞ்சம் கவனம் தேவை.... ப்ளீஸ் ....!!!!!!!

2 கருத்துகள்:

  1. நண்ப

    கவிதை அருமை - அருமை. பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்கள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதுவும் மருத்துவர்களின் கவனக் குறைவினால் என்பது அபாண்ட குற்றச்சாட்டு.

    கடைசி இரண்டு பத்திகள்..... கருவறையில் குடி இருந்ததும் - கல்லறையில் நிற்பதுமாக கருத்து கூறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் மகனும் கல்லறைக்குச் சென்று விட்டதாக ஒரு பொருள் தொனிக்கிறதே !!

    பெற்றவள் இறந்தபொழுதும் - வாரிசு வந்ததே எனக் களிக்கும் குடும்பம் - இயல்பான செயலாக இல்லையே.

    மனதில் பட்டதைச் சொன்னேன் - அவ்வளவு தான்

    பதிலளிநீக்கு