சனி, 14 மார்ச், 2009

கைக்கூ

கடித்தது

இருளில் செருப்பை தேடினான்

காலை கடித்து விட்டது

செருப்பல்ல இவன் காலில் பட்ட நாய் ....

யாருக்கும் கிடைக்காத அண்ணன்கள் ....

எனக்கு கிடைத்த அண்ணன்கள் .......

அன்பு பதிவு நண்பர்களே...உங்களுக்கு நான் சொல்லபோவது வேண்டுமென்றல் சின்ன விழயமா இருக்கலாம்..ஆனா எனக்கு இது ரொம்ப பெரியது ...

எங்க வீட்டுல நான் தான் கடைக்குட்டி .. அதாவது கடைசி பையன் ... எனக்கு இரண்டு அண்ணன்கள் ... அதான் அவங்கள பத்தி தான் நான் சொல்லப்போறேன் .... என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர் ..... நான் பெருமைக்காக சொல்லவரல என் அப்பா ரொம்ப சிக்கனமானவர் ... எந்த பிரச்சனைக்கும் போகமாட்டாங்க ... தான் உண்டு தன் வேலை உண்டு ,என்று இருப்பாங்க .அம்மா எப்பவும் எனக்கு ஆதரவா பேசுவாங்க .எங்க மூணு பேருல நான் மட்டும்தான் உருப்பிடாத ஆளு என்று என் அப்பா அடிக்கடி திட்டுவாங்க ...

நான் பத்தாவது படிக்கும் போதே என் சின்ன அண்ணன் சிங்கப்பூர் போயி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டார் ....அடுத்த ஒரு வருடத்தில பெரிய அண்ணனும் சிங்கப்பூர் போயிட்டார் ....இரண்டு பேரும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க ... ஆனா நான் மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேற்ப் படிப்பிற்காக என் அப்பா பல வகைகளில் பல லட்சங்கள் செலவு செஞ்சாங்க ... ஆனா எனக்கு எதவுமே சரியில்லை ..

ஆனா நான் வீனா செலவு நெறைய செய்வேன் .. அது என் அப்பாவிற்கு பிடிக்காது .. என் அப்பா என்னை எப்ப திட்டினாலும் என் அண்ணன்களை உதாரணம் காட்டி திட்டுவாங்க.நான் +2 முடித்து நான்கு வருடங்கள் ஆகியும் எனக்கு ஒரு தெளிவான முடிவு எடுக்கமுடியல .ஆனா என் அப்பா 2001 இல் பல முயற்சிகளுக்கு பிறகு என்னை ஹோட்டல் நிர்வாக (அதாவது சமையல் கலை )படிப்பில் சேர்த்து விட்டார்கள் ...

ஏதோ வேறு வழி இன்றி அதை படித்து முடித்தேன் ....

ஆனா படித்து விட்டேன் . ஆனா அதற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை .ஏதோ சென்னைக்கு போயி ஒரு வழியா வேலைக்கு சேர்ந்தேன் .. ஆனா எனக்கு சம்பளம் மாதம் ரூபாய் 250/= மட்டுமே .. இருந்தும் என்னுடைய செலவுக்கு போதாது ..!!! எனவே மற்ற செலவுகளுக்கு என் அப்பாவை தான் எதிர்பார்த்தேன் ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே பணம் கிடைத்தது ..ஒரு நாள் என் அப்பா என்னிடம் இனிமேல் நீ என்னிடம் பணம் கேட்கக்கூடாது .நீ சம்பாதித்து உன் செலவுகளை பார்த்துக் கொள் என்றார் ..

எனக்கு வேறு வழி தோன்றவில்லை .. என் சின்ன அண்ணனிடம் பணம் கேட்டேன் .. என் அண்ணனும் சரி என்று பணத்தை சிங்கபூரிலிருந்து அனுப்பி வைத்தார் ...அந்த பணம் முடிந்தவுடன் அடுத்து என்னசெய்வது.. உடனே என் பெரிய அண்ணனிடம் பணம் கேட்டேன் ...எது சின்ன அண்ணனுக்கு தெரியாது .. இது போன்று பல தடவை இருவருக்கும் தெரியாமல் நிறைய பணம் வங்கி செலவு செய்து விட்டேன் ... பல தடவை பல பொய்களை சொல்லி பணம் வாங்கி இருக்கிறேன் .அவர்களும் தம்பி தானே என்று பணம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் ..நான் வீண் செலவு செய்கிறேன் என்று

என் நண்பர்கள் மூலம் என் அண்ணன்களுக்கு தெரிந்துவிட்டது . இருந்தும் நான் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கும்பொழுது என் அண்ணன்கள் இருவரும் உனக்கென்று ஒரு வழியை தேடிக்கொள் நாங்கள் முடித்தவரை உதவி செய்கிறோம் .ஆனால் உன் வாழ்க்கையை வீனடித்துவிடதே ...என்று அறிவுரை கூறுவார்கள் ... என்னால் மாதம் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க முடிய வில்லை ,ஏனெனில் ஹோட்டல் தொழில் அந்த மாதிரி .பலருக்கு படிக்க வழி இல்லை அப்படி படித்தாலும் பணம் கொடுக்க யாரும் முன் வருவதில்லை . ஆனால் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்தது பெங்களூரில் படித்தால் அமெரிக்கா செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறதென்று என் நண்பன் மூலம் அறிந்தேன் .. ஆனால் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆகும் .. ஆனால் என் அப்பா என்னை நம்பி பணம் கொடுக்க தயாரக இல்லை .ஏனென்றால் என்னைப் பற்றி நன்கு தெரியும் .

ஆனால் இதை என் அண்ணன்கள் இருவருக்கும் தெரிய வந்து இருவரும் கலந்து ஆலோசித்து ..எனக்கு பணம் தருவதாக முடிவு செய்தனர் .ஆனால் இருவருக்கும் என் மேல் நம்பிக்கை இல்லை .ஏதோ தம்பி என்ற ஒரு காரணத்திற்க்காக பணம் கொடுக்க முடிவு செய்தார்கள் .. பலபேரின் சொற்களை கேட்டு கொஞ்சம் தாமதமாகத்தான் பணம் கொடுத்தார்கள் ..

நானே என்னை புரிந்து கொண்டு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி என் அண்ணன்களின் கனவை நனவாக்கி என் அப்பாவிடமும் நல்ல மகனென்று நிருபித்து விட்டேன் .. இன்று நான் அமெரிக்காவில் வேலை பர்த்துக்க் கொண்டிருக்கிறேன் .இன்றைய காலகட்டத்தில் இது போன்ற அண்ணன்கள் எனக்கு கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன் ...என் பாசமிகு அண்ணன்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாமல் இதோ ஒரு கவிதையை சமர்பிக்கிறேன் ...

என் அண்ணன்களுக்காக ஒரு கவிதை

எனக்கோ இரண்டு அண்ணன்கள்

மூத்தவர் பாரதி

இளையவர் முரளி

ஆனால்

எனக்கோ இரண்டு தம்பிகள்

அடுத்த பிறவியில் ...

என் அண்ணன்களுக்கு

அண்ணனாக நான் பிறக்க ஆசை ...

(உங்களோட அண்ணன்கள் எப்படி நண்பர்களே .....!!!!)

அரட்டை அகிலன் ..........

கவிதை

வறுமை

வறுமையால்
தற்கொலை செய்ய
குதித்தான் தண்ணீரில்லா
கிணற்றில் ...!!!

கால் ஒடிந்தது
பணமில்லை
மருத்துவ செலவிற்கு ...

அரட்டை அகிலன் ...

சுவிசர்லாந்தில் ஒரு சுவையான அனுபவம்....!!!


சுவிசர்லாந்தில் ஒரு சுவையான அனுபவம்....!!!


நான் ஹோட்டல் நிர்வாக படிப்பு முடித்துவிட்டு சென்னையில
ஆறு வருடமா வேலை பார்த்து வந்தேன் ....!!!!ரொம்ப நாளா குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தேன் .!!! ஒரு நாள் என் நண்பன் மூலமா அமெரிக்காவில் வேலை பார்க்க ஒரு நேர்முக தேர்வுக்கு வாய்ப்பு கிடைத்தது ... !!! வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டேன் ...

சில மாதம் கழித்து அமெரிக்கா விசாவும் கிடைத்து விட்டது .நான் இது நாள் வரைக்கும் வெளி நாடு சென்றதில்லை ....இது முதன் முறையாக செல்கிறேன் ...எனக்கு டிக்கெட் சுவிசர்லாந்து போயி அப்புறம் அங்கிருத்து அமெரிக்காவுக்கு போகணும் ..

இரவு இரண்டு மணிக்கு சென்னையில் ஏறி மதியம் 2:30 மணிக்கு சுவிசர்லாந்து போயிட்டேன் ... இது முதல் முறை என்பதால் எனக்கு சற்று பயமாகவே இருந்தது.. ! அங்கிருந்து எனக்கு 4:30 மணிக்கு எனக்கு அடுத்த விமானம், அதாவது அங்கிருந்து அமெரிக்கா போவதற்கு இன்னும் எனக்கு இரண்டு மணிநேரம் தான் டைம் இருக்கு ...!!!!

அடுத்த விமானம் எப்போது எந்த இடத்திலிருந்து புறப்ப்படு முன்னு தெரியாது ... அதனால அங்கிருக்கிற உதவி மையத்தில் போயி கேட்டேன் ... அதுக்கு அங்க உள்ள ஒரு பெண் நீங்க போக கூடிய விமானம் இன்னும் வரலே ... அதனால நீங்க வெயிட் பண்ணுங்க .. என்ற பதில் வந்தது ... மணி மாலை 3:30 ஆகிவிட்டது மீண்டும் போயி அதே பெண்ணிடம் கேட்டேன் ... நான் போக கூடிய விமானம் வந்துவிட்டதா என்று .... அதற்கு இன்னும் வரவில்லை என்ற அதே பதில் தான் ..!!!


ஒரு முப்பது நிமிடம் கழித்து மீண்டும் பொய் கேட்டேன் ... மணி 4:30ஆகிவிட்டது இது நான்காவது முறை... மீண்டும் அதே பதில்.போயி வெயிட் பண்ணுங்க ..... என்கிற அதே வார்த்தை .. 4:30 மணிக்கு எனக்கு flight ஆனா மணி இப்போ 4:10 இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கு... திரும்பவும் போயி confirm பண்ணிக்கிவோம் என்று நினைத்து என்னுடைய கடிகாரத்தை அந்த பெண்ணிடம் காட்டி இன்னும் எனக்கு 20 நிமிடம்தான் இருக்கிறது என்றேன் ...நீங்கள் சரியான தகவலை தரவில்லை என்றால் நான் எனது விமானத்தை தவற விட்டு விடுவேன் .. தயவு செய்து சரியான பதிலை தருமாறு கேட்டேன் ..

அதற்கு அந்த பெண் சற்றே கோபம் தெரிந்த முகத்துடன் விமான நிலையத்தில் உள்ள கடிகாரத்தை காட்டி இப்போ மணி 12:30 தான்
ஆகிறது .... ஆனா உங்களுக்கு விமானம் 4:30 மணிக்கு தான் எனவே இன்னும் 4 மணி நேரம் இருக்கு ... தயவு செய்து உங்கள் கடிகாரத்தின் மணியை மாற்றி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் அப்போது தான் புரிந்தது இந்தியாவுக்கும் இடையே நேரம் வித்தியாசம் இருக்கும் என்பது ....சற்றே சுற்றும் முற்றும் உள்ளவர்களை பார்த்து ஒரு அசட்டு சிரிப்புடன் தலையை குனிந்தவாறு அந்த இடத்திலிருந்து மெல்ல நகர்ந்தேன் ... எனவே இனி புதிதாக செல்பவர்கள் என்னை போல் அல்லாமல் புத்திசாலி தனமாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் .....

(மேலே நடந்தது உரையாடல் எல்லாம் ஆங்கிலத்தில் தான் நடந்தது ....ஓகே வா ..!!அங்கே யாரும் தமிழ் பேசமாட்டங்க.....)

அரட்டை அகிலன் .....


வியாழன், 12 மார்ச், 2009

உழைப்பை நம்பு ......!!!!!!

இது என் நண்பன் .......

என்ன செய்யுறான் உங்களுக்கு தெரயுதா ? இவனும் நானும் அமெரிக்கா வுல ஒரே இடத்தில் தான் வேல பாக்கிறோம் .... ஆனா பண்ணுற வேல எல்லாம் குசும்ப இருக்கும் ...... லீவ் ல என் நண்பன் எங்க வீட்டுக்கு வந்தப்ப நான் என் கேமரா வுல கிளிக் பண்ணினேன் ...

இந்த படத்த பார்த்ததும் என் மனசுல ஒரு கவிதை தோனுச்சு .....


உண்ட சோறு பாதிருக்க
உலை கொதிக்கிது
அடுத்த வேளைக்கு........

தெண்ட சோறாய்
நீ இருக்க
வேலைக்கு நான் எதற்கு
என்று மனைவி கேட்க....

உடம்பில்
பலமிருந்தும்
வெக்கம் இன்றி
பிச்சை எடுக்க பலபேர் .....

நாட்டில்
வளமிருந்தும்
வியர்வை சிந்தி உழைப்பவனோ
சிலபேர் .....

திறமை இருத்தும்
நம் நாட்டில்
வறுமை அதிகம் ......

இதோ இந்த
வாலிபனிடம்
கையில் உணவிருந்தும்
அடுப்பு வூதுகிறான்
அடுத்த வேளைக்கு........


இத பாத்ததும் உங்களுக்கு என்ன தோனுது ...???


ஜஸ்ட் ஹைக்கூ வா கூட இருக்கலாம் ....

ஓகே .... பை ...

அன்புடன் அரட்டை அகிலன் .......

திங்கள், 9 மார்ச், 2009

இது என்ன ?

இந்த படம் என்ன என்பதை கண்டுபிடித்து இது எந்த நாட்டில் உள்ளது என்பதையும் கண்டுபிடிங்கோ ???

ஆனா இது நான் எடுத்த படம் இல்லைங்கோ ஏதோ என் கைக்கு கிடைத்த படம்...

ஓகே வா ......

நான் புதுசு தானே அதனாலே மன்னிச்சி உட்ட்ருங்கோ .....

அடுத்த வாரம் தன் நான் கேமரா வாங்க போறேன் அதுக்கு இந்தியன் பேங்க் ல லோன் போட்டுரிக்கேன் ...... கேமரா வந்த உடனே நிறைய நானே போட்டோ எடுத்து அனுப்புறேன் .........

ஓகே வா

அன்புடன் அரட்டை அகிலன்...

ஞாயிறு, 8 மார்ச், 2009

கருவறையில் குழந்தை...!!!! கல்லறையில் அம்மா..!!!!!

கருவறை பூங்காவில்

கால் உதைத்த நேரமெல்லாம்

கண் இமைக்கும் நேரத்தில்

காணாமல் போய்விட்டன .....!

பத்து மாதம் பட்டதெல்லாம்

துன்பமென நினைத்ததை

பெற்றெடுத்த நிமிடமே

பெருமூச்சு விட்டாள்

சந்தோஷ களிப்பில் ....!!

வாரிசு ஒன்று வந்ததென்று

குடும்பமே குதுகலிக்க

வந்தோருக்கெல்லாம்

வாய் சுவைக்க வகை வகையான

மிட்டாய்கள் .........!!!

பெற்றெடுத்த மகன்

கண் விழித்து பார்க்க

நாட்கள் பல ஆகின ....!!!!

மருத்துவரின் கவனக்குறைவால்

மகனை ஈன்றுவிட்டு

மாண்டு விட்ட தாய்.....!!!!!

இன்று

வாய் பேச வரும்போது

ஆசையை அழைத்தான் அம்மா என்று ...!!!!

கூப்பிட்ட குரலுக்கு

பதிலேதும் வரவில்லை .....!!!!

அன்று

குழந்தைக்கு

அம்மா யாரென்று

தெரியாமல்

கருவறையில் .......!!!!!

இன்று

அம்மா யாரென்று

தெரிந்தும்

காண இயலாமல்

கண்ணீர் துளியோடு

கல்லறையில் .........!!!!!!!!!

நீர் வடியும் கண்களோடு ........

அரட்டை அகிலன் ....

பின் குறிப்பு : இன்றைய காலகட்டத்தில் பிரசவ அறையில் இறக்கும் தாயின் எண்ணிக்கை அதிகம் ....ஒருவன் பிறக்கும்போது அவனது தாய் மரணமடைந்து விட்டால் இதை விட கொடுமை வேறு இல்லை ......!!!!மருத்துவர்களே கொஞ்சம் கவனம் தேவை.... ப்ளீஸ் ....!!!!!!!

சனி, 7 மார்ச், 2009

பணம் இருந்தும் மனம் இல்லை

பள்ளிப் பருவத்தில்

அழுது அடம் பிடித்து

காசு கேட்ப்பேன் அப்பாவிடம்

பட்டாசு வாங்க .....!!!!

தீபாவளி போனஸ் ஆக

இரண்டு அடியும்

வங்கிக்க் கொள்வேன் ...!!!

மேல்முறையீடு அம்மாவிடம்

என் அழுத முகத்தை பார்த்து

ஐந்து ரூபாய்

அப்பாவிற்கு தெரியாமல் ....

ஏழு தலைமுறையே

கடந்த மாதிரி

ஏகப்பட்ட சந்தோசம் ...

அன்று என் கையில்

பணம் இல்லை

இன்று என் கையில்

பணம் இருந்தும்

பட்டாசு வாங்க மனம் இல்லை ...

ஏனென்றால்

"பணத்தின் அருமை உனக்கு இப்பொது தெரியாது

நீ சம்பாதித்தால் தான் தெரியும்"....!!!!!

இன்றும் என் காதில்

என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்

என் சிக்கனத்தின் சிகரமான

அப்பாவின் தாரக மந்திரம் ............

அன்புடன்

அரட்டை அகிலன்

ஹாய்

நான் தான் அரட்டை அகிலன் ...

நான் இந்த வலைப்பதிவிற்கு புதியவன் .... ஏதோ என் எண்ணத்தில் தோன்றியவற்றை இந்த பதிவில் பதிக்கிறேன் ....

அருள்கூர்ந்து என்னையும் உங்கல்லில் ஒருவனாய் ஏற்றுக் கொள்ளவும் ...